ஆன்மீகம்
அட்சய திருதியை 2025: தங்கம் வாங்க முடியாவிட்டாலும் இந்த பொருட்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
அட்சய திருதியை 2025: தங்கத்திற்கு மாற்றாக வாங்கக்கூடிய அதிர்ஷ்ட பொருட்கள்!
இந்து கலண்டரின்படி, சித்திரை மாத சுக்ல பட்சத்தின் 14வது நாளில் கொண்டாடப்படும் அட்சய திருதியை (Akshaya Tritiya) ஒரு மங்கலகரமான நாள் ஆகும். “அட்சயம்” என்றால் “அளவுக்கதிகமானது”, “அள்ளஅள்ள குறையாதது” என்பதைக் குறிக்கும். இந்த நாளில் நாம் செய்வதெல்லாம் வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.
2025ம் ஆண்டு, அட்சய திருதியை ஏப்ரல் 29 மாலை 05:29 மணி முதல் ஏப்ரல் 30 பிற்பகல் 02:12 மணி வரை இருக்கும். உதய தேதியை அடிப்படையாகக் கொண்டு, இந்த பண்டிகை ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படும்.
இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருட்களை வாங்குவது மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை தரும் என நம்பப்படுகிறது. ஏப்ரல் 30 காலை 05:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம் வாங்க ஏற்ற நேரமாகக் கருதப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் தங்கம் விலை அதிகமாக இருப்பதால், அனைவராலும் அதை வாங்க இயலாது. ஆனால் அதற்கு பதிலாக சில பரிகார பொருட்களை வாங்கினாலும் அதே நன்மையை பெற்றிடலாம்.
தங்கத்திற்கு மாற்றாக வாங்கக்கூடிய அதிர்ஷ்டப் பொருட்கள்:
பருப்பு வகைகள் – வளம் பெறும் நன்மை
கீரை மற்றும் காய்கறிகள் – பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் சின்னம்
தானியங்கள் (அரிசி, பார்லி) – செல்வ வளர்ச்சியின் அடையாளம்
மண்குடம் – வீடு மற்றும் குடும்ப நலனுக்காக
சங்கு – ஆன்மிக சுத்தத்திற்காக
ஸ்ரீயந்திரம் – லட்சுமி தேவியின் சக்தி
நெய் – புனித நன்னெய், அத்தியாசமாக நன்மைகளை கூட்டும்
இவ்வாறான பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நிம்மதி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

அட்சய திருதியை 2025: ஒரே நாளில் 10 சுப யோகங்கள்! செல்வ வளம் பெருக சுப நேரம் வந்தாச்சு!

அட்சய திருதியை 2025: ராசிக்கேற்ப வாங்க வேண்டிய பொருட்கள் – செல்வத்தை பெருக்கும் பரிகாரங்கள்!

அட்சய திருதியை 2025: பானையிலிருந்து துடைப்பம் வரை… லட்சுமி கடாட்சம் பெற வாங்க வேண்டிய 8 முக்கிய பொருட்கள்!

அட்சய திருதியை 2025: செல்வமும் அதிர்ஷ்டமும் பெருக செய்யவேண்டியதும் தவிர்க்கவேண்டியதும்!

அட்சய திருதியை 2025: இந்த செயல்கள் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கூட்டும் – தவிர்க்க வேண்டியவை இவை!

அட்சய திருதியை 2025: தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி வாங்கலாமா? நிபுணர்கள் கூறும் விளக்கம்!












