வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள் – 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான RRB, 32,438 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் குரூப் டி பிரிவில் உள்ளன மற்றும் 10ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதன் அடிப்படை ஊதியமாக ரூ. 18,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மற்ற படி தொகைகள் சேர்த்து மொத்தம் ரூ. 25,000 வரை ஊதியமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.பணி வகைகள்
இந்த காலி பணியிடங்களில் உள்ள பிரிவுகள்:
- Pointsman B (Traffic)
- Assistant (Track Machine) (Engineering)
- Assistant (Bridge) (Engineering)
- Assistant (Workshop) (Mechanical)
இதன் மூலம், வடக்கு ரயில்வேயில் 4,785, மேற்கு ரயில்வேயில் 4,672, மத்திய ரயில்வேயில் 3,244, தெற்கு ரயில்வேயில் 2,694 மற்றும் மற்ற மண்டலங்களில் பல பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிப்பவர்கள் 23 ஜனவரி 2025 முதல் 22 பிப்ரவரி 2025 வரை RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.rrbapply.gov.in/) விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு முறை:
- கணினி அடிப்படையிலான தேர்வு
- உடல் தகுதி தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
- மருத்துவ பரிசோதனை
வயது வரம்பு:
- பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 36 வயது வரை
- ஓ.பி.சி (க்ரீமி லேயர் அல்லாதவர்கள்) 39 வயது வரை
- எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 41 வயது வரை
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

RRB ஆட்சேர்ப்பு 2025: ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…

இந்திய ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் சொந்தமான உணவு விடுதியில் வேலை!

இந்திய ரயில்வேவின் சுற்றுலாத்துறையில் வேலை!

இந்திய ரயில்வேயில் வேலை வேண்டும்? உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியிடங்கள் 1,30,000 உள்ளதால் வேலைக்கு விண்ணப்பியுங்கள்!























