ஆன்மீகம்
சூரியன் பெயர்ச்சி 2025: தை மாதத்தில் அதிர்ஷ்டம் தரப்போகும் ராசிகள் யாவை?
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சூரியன் மகர ராசிக்குள் பெயர்ச்சியாகி, தை மாதத்துக்கு தொடக்கமாகிறது. சூரியனின் இந்த பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும். தை மாதத்தில் எந்த ராசிகளுக்கு செல்வமும், நிம்மதியும் கிட்டப் போகிறதென பார்ப்போம்.மேஷம்:
தை மாதம் மேஷ ராசியினருக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உயர் கல்வி மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும், திருமண வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு தை மாதம் ஆனந்தகரமானதாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும், ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு சூரியனின் அருளால் தடைபட்ட வேலைகள் முடியும். விரும்பிய வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிப்பதால் கடன் தொல்லைகள் தீரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு தொழிலிலும், கல்வியிலும் முன்னேற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும், முயற்சிகள் வெற்றி பெறும்.
மகரம்:
மகர ராசியினருக்கு தை மாதம் பண வரவுகள் நிறைவாக இருக்கும். வீடு மற்றும் நிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பழைய முதலீடுகள் லாபம் தரும். ஆடம்பர வாழ்க்கைக்கு செலவுகள் அதிகரிக்கலாம்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு தை மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். முதலீடுகளால் நன்மை காணலாம்.
மீனம்:
மீன ராசியினருக்கு வெற்றி தரும் மாதமாக தை அமையும். தொழிலில் வெற்றியும், வியாபாரத்தில் அதிக வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்குவர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


