சினிமா
அஜித் கார் விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் – கதறும் ரசிகர்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அஜித் குமார், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத முறையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. அதின்பிறகும், அஜித் அதிஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளார்.
துபாயில் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் கார் ரேஸ் போட்டிக்காக, அஜித் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த போட்டியில் பங்கேற்க அவர் தனியாக தனது காரை வடிவமைத்து தயார்படுத்தியிருந்தார். சமீபத்தில் அவர் “விடாமுயற்சி” படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொண்டு, துபாய் திரும்பிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
அஜித் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதினால், உடனடியாக மருத்துவ குழு அவசர உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டது. விபத்து குறித்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், காயம் எதுவும் இல்லை என்பதை அறிந்து அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
முன்னதாக பைக் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறிய ஒரு சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. “ரேஸ் சாகசங்களில் பாதுகாப்பு மிகவும் முக்கியம், நான் முறையான பயிற்சி எடுத்து தான் ரேஸ் செய்வேன். விபத்துகளை 90% தவிர்க்க முடியும், ஆனால் மீதமுள்ள 10% இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும்,” என்று அஜித் தெரிவித்திருந்தார்.
இந்த சமீபத்திய விபத்துக்குப் பிறகும், அஜித் மீதான ரசிகர்களின் அன்பும், கடவுளின் ஆசியும் அவரை காக்கும் என்று அவருடைய ரசிகர்கள் நம்புகின்றனர். அதேவேளையில், “இனி கார் ரேஸ் செய்ய வேண்டாம்” என ரசிகர்கள் அஜித்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.
Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed.
Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0— Ajithkumar Racing (@Akracingoffl) January 7, 2025
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

தயாரிப்பாளர் சங்கம் முதுகெலும்பு இல்லாத சங்கம்; பிவிஆர் செய்யும் அட்டூழியம் – சுரேஷ் காமாட்சி!

வீர தீர சூரன் மாஸாக இருக்கும் – நடிகர் விக்ரம் உறுதியளிப்பு!

SK ‘பராசக்தி’ டைட்டில் டீசர் வெளியீடு – சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பரபரப்பு அப்டேட்!

ஜெயிலர் 2 | ரஜினியின் ஜெயிலர் 2-க்கு அனிருத் பெற்ற சம்பளம் ரூ.18 கோடி!

12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!

தமிழ்சினிமாவின் மனதை மயக்கும் 10 மழை பாடல்கள்!



















