தமிழ்நாடு
தமிழகம்: டிச.24 கிறிஸ்துமஸ் முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 24 (செவ்வாய்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இதனை அறிவித்துள்ளார்.
ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில்:
- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 24ஆம் தேதி (கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள்) உள்ளூர் விடுமுறையாக இருக்கும்.
- இந்த விடுமுறைக்கு ஈடாக, டிசம்பர் 28ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.
அதேசமயம், 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டம் படி, டிச.24 விடுமுறை முழுமையான சிறப்பு விடுமுறையாக இருக்காது. இதனால், தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அவசர பணிகளுக்காக தேவையான பணியாளர்களுடன் இயங்கும்.
கிறிஸ்துமஸ் விழா:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இந்த வருடமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உற்சாகமாகக் களைகட்டத் தொடங்கியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















