சினிமா
பிக் பாஸ் 8: இந்த வாரம் கண்ணீருடன் வெளியேறப்போகும் சாச்சனா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்கி வருகின்றது. இதுவரை நடைபெற்ற எலிமினேஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.
இந்த வாரம் நடைபெற்ற ராஜா – ராணி டாஸ்க் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆண்கள் அணியில் இருந்து ராணவ் “ராஜா”வாகவும், பெண்கள் அணியில் சாச்சனா “ராணி”வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல டாஸ்க்களில் ஆண்கள் அணி 4 வெற்றிகளைப் பெற்றது, பெண்கள் அணி ஒரு வெற்றியில் முடிந்தது. இதனால் பெண்கள் அணிக்கு அரியணை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வாராந்திர நாமினேஷனில் இந்த வாரம் மொத்தம் 13 பேர் இடம்பெற்றிருந்தனர். முத்துக்குமரன் மற்றும் செளந்தர்யா அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர். விஷால், ராணவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா ஆகியோரும் பாதுகாப்பான நிலையில் உள்ளனர்.
இருப்பினும், வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார் ஆகிய 4 பேர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். குறிப்பாக, சிவக்குமார் ஆண்கள் அணியின் “நாமினேஷன் பாஸ்” மூலம் காப்பாற்றப்பட்டார். இதனால் சாச்சனா, வர்ஷினி அல்லது ஆனந்தி ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறவுள்ளனர். அதிக வாய்ப்புகள் சாச்சனாவுக்கு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

















