ஜோதிடம்
தங்கமா? நிலமா? ராசிக்கேற்ற முதலீடுகள் – துலாம் முதல் மீனம் வரை!

ஜோதிடத்தில் 4ஆம் இடம் என்பது முதலீடுகளை குறிக்கக்கூடிய முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு லக்னத்திற்கும் 4ஆம் வீட்டின் அதிபதியின் சக்தியால் முதலீட்டு வெற்றிகள் தீர்மானிக்கப்படுகின்றன. துலாம் முதல் மீனம் லக்னம் வரை, அவ்வப்போது முதலீடுகளைத் தேர்வுசெய்வது மிகவும் முக்கியம்.
துலாம் (Libra):
துலாம் லக்னத்திற்கு 4ஆம் அதிபதியாக சனி உள்ளார். பழமையான சொத்துகள், கலைப் பொருட்கள், பழைய நாணயங்கள் மற்றும் இரும்பு, கழிவு மறுசுழற்சி போன்ற துறைகளில் முதலீடு செய்வது நன்மையை தரும். தொழிலாளர்கள் சார்ந்த துறைகளில் முதலீடுகள் கூட சாதகமாக இருக்கும்.
விருச்சிகம் (Scorpio):
விருச்சிகம் லக்னத்தில், கும்ப சனி 4ஆம் அதிபதியாக உள்ளார். இதனால் பழமையான சொத்துக்கள், கலைப் பொருட்கள், மற்றும் ரகசிய தொழில்களில் முதலீடு நல்ல பலனைத் தரும். மேலும் பெட்ரோலிய துறை மற்றும் கழிவு மறுசுழற்சி முதலீடுகள் நன்மை தரும்.
தனுசு (Sagittarius):
தனுசு லக்னத்திற்கு குரு பகவான் 4ஆம் அதிபதியாக இருப்பதால், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பங்கு முதலீடுகள் நன்மையை தரும். தங்கம் மற்றும் கல்வி சார்ந்த முதலீடுகள் மிகுந்த வளர்ச்சியை தரும். வீடு கட்டி வாடகை விடுவதும் நல்ல தேர்வாக இருக்கும்.
மகரம் (Capricorn):
மகரம் லக்னத்திற்கு செவ்வாய் 4ஆம் அதிபதியாக இருப்பதால், பாதுகாப்பு, மருத்துவம், மருந்து போன்ற துறைகளில் முதலீடு நன்மை தரும். சகோதர வழி சொத்துக்களைத் தவிர்ப்பது நன்மை. விவசாயம், கால்நடை போன்ற தொழில்கள் உயர்வை தரும்.
கும்பம் (Aquarius):
கும்பம் லக்னத்திற்கு சுக்கிரன் 4ஆம் அதிபதியாக இருப்பதால், மனைவியின் பெயரில் முதலீடு செய்தால் நன்மை. பெண்களுக்கு உபயோகமான துறை, ஜவுளி மற்றும் டைலரிங் முதலீடுகள் சாதகமாக இருக்கும். முதலீடுகளை கவனமாக திட்டமிட வேண்டும்.
மீனம் (Pisces):
மீனம் லக்னத்தில் 4ஆம் அதிபதி 7ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால், வாழ்கை துணை சார்ந்த முதலீடுகள் நல்ல வளத்தை தரும். கல்வி, அறிவுசார் சொத்துரிமை, மற்றும் நிதி தொடர்பான துறைகளில் முதலீடு சிறப்பான பலனை தரும்.





















