வணிகம்
8வது ஊதியக் குழு ToR-ல் ஓய்வூதியர் திருத்தம் சேர்க்கவில்லை – முன்னாள் ஊழியர்களில் கடும் அதிருப்தி!

மத்திய அரசு வெளியிட்டுள்ள 8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் (ToR) தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழுவின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், பல லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்களின் முக்கிய கோரிக்கை—ஓய்வூதியத் திருத்தம்—ToR-ல் இடம்பெறாதது முன்னாள் ஊழியர்களின் அதிருப்தியை தூண்டியுள்ளது.
All India Defence Employees Federation (AIDEF) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் சி. ஸ்ரீகுமார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில்,
➡️ ToR-ல் 6.9 மில்லியன் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் ஓய்வூதியத் திருத்தம் குறித்த பிரிவை உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதே கடிதம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
“30–35 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த கோடிக்கணக்கான ஓய்வுபெற்ற ஊழியர்களை இப்படிப் புறக்கணிப்பது மிகப்பெரிய தவறு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 7வது ஊதியக்குழுவின் ToR மற்றும் 8வது குழுவின் ToR இடையே பெரிய வித்தியாசங்கள் உள்ளதாகவும்,
➡️ 7வது சம்பளக் குழுவில் இருந்த அனைத்து முக்கிய பிரிவுகளும் 8வது குழுவில் சேர்க்கப்படாமல் போனது கவலைக்குறியதாக உள்ளது.
OPS (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் நாடு முழுவதும் 2.6 மில்லியன் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் புதிய ToR-ல் OPS பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பதும் AIDEF-ன் எதிர்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் AIDEF,
✔️ 2026 ஜனவரி 1க்கு முன் ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தம் செய்ய வேண்டும்
✔️ ஓய்வூதியத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயமாக மாற்றம் செய்ய வேண்டும்
✔️ 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
என்று வலியுறுத்தியுள்ளது.
ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு ஓய்வுபெற்றவரின் உரிமை என்பதால், ToR-ல் இதனை சேர்க்காமல் விடுவது மிகப்பெரிய கவனக்குறைவாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.















