தமிழ்நாடு
தமிழக இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் மே மாதம் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து சட்டசபை செயலாளர் சீனிவாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.
மேலும் பிப்ரவரி 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தலை மனதில் வைத்து பல்வேறு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

















