தமிழ்நாடு
ஒருபுறம் 200 பேருக்கு திருமணம், மறுபுறம் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. துடிதுடித்த கர்ப்பிணி!

கடலூரில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு திருமண நிகழ்ச்சி நடந்த போது, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத ஸ்வாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200 திருமணம் நடைபெற்றது. இதற்காக 200 பேரினுடைய குடும்பங்களும் அவர்களை வாழ்த்த அப்பகுதியில் குவிந்தனர். வாகனம் நிறுத்த முடியாத அளவில் இருந்தது, இதனால் அப்பகுதி இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசலாக இருந்தது.
இந்நிலையில் இன்று 11 மணியவளில் அந்த வழியாக 108 வாகனம் சென்ற போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. கர்ப்பணியுடன் சென்ற அந்த ஆம்புலன்ஸ் ஒரு அடி கூட நகர முடியாத அளவில் இக்கட்டான சூழலுக்கு உள்ளானதால், வேறு வழி வாகனத்தில் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். பின்னர், மீண்டும் கடலூருக்கே ஆம்புலன்ஸ் திரும்பியது.