சினிமா செய்திகள்
100 கோடி பாக்ஸ் ஆபிஸில் நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிரான குரலாக கம்பீரமாக பதிவானது.
பாலிவுட்டில் அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை எச். வினோத் இயக்க, அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.
இப்படி ஒரு படத்தை ஏற்று அஜித் நடித்ததால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும், நேற்று வரை படத்தின் வசூல் உலகம் முழுவதும் 96 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால், படம் 100 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று வெளியான கோமாளி படம் சென்னையில் நேர்கொண்ட பார்வையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


















