சினிமா செய்திகள்
ஃபுல் சரக்கு.. மரண மட்டை.. – 90ml விமர்சனம்!’

படத்தில் ஓவர் குடி, புகை, கஞ்சா, ஆபாசம் என படம் ரொம்ப ஓவரா இருக்கு ஓவியான்னு நாங்க விமர்சிக்க போறதில்லை.. படத்திற்கு ஏ சர்டிபிகேட் வாங்கிதான் ரிலீஸ் செய்துள்ளனர்.

பசங்கள வைத்து எடுக்கப்படும் படங்களில் குறிப்பாக வெங்கட் பிரபு, ராஜேஷ் போன்ற இயக்குநர்களின் படங்களில் நாயகன் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதை ஜாலியாக காட்டும் இயக்குநர்களும், அதனை ஈசியாக கடந்து போகும் மக்களும், பெண்கள் என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருவது எதனை உணர்த்துகிறது என்பது புரியவில்லை.
சரி 90ml நல்லா இருக்கா இல்லையா என்ற கதைக்கு வருவோம்.. காதலனுடன் லிவிங் டுகெதரில் இருக்க அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்கு குடிவருகிறார் ரீட்டா (ஓவியா). அங்கு இவர் குறித்து அறியும் 4 பெண்கள் இவருடன் நட்பாக பழக தொடங்கு கின்றனர். பின்னர் ஒரு பெண்ணின் பிறந்த நாள் பார்ட்டியை மப்பும் மந்தாரமுமாக கொண்டாட ஓவியா ஏற்பாடு செய்கிறார். அப்போது, போதையில் மூழ்கும் பெண்கள், குடும்ப வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளையும், செக்ஸ் வாழ்க்கை குறித்தும் பேசுகின்றனர்.
ஒவ்வொருவரின் கதையிலும், ஆண் ஆதிக்கம் குடி கொண்டு இருப்பதை விளக்க இயக்குநர் அனிதா உத்தப், போதை பொட்டலங்களுடன் முயற்சி செய்திருப்பது புது முயற்சி தைரியமான முயற்சி என்றாலும், ஓவர் ஆல்கஹால் உடம்புக்கு ஆகாது என்கிற காஷனையும் ஏற்படுத்துகிறது.
படத்தை புரொமோட் செய்ய படக்குழு செய்திருந்த பாழ், பழம் மற்றும் தேன் ஸ்நீக் பீக்குகள், சில மணி நேரங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பார்த்து ஷேர் செய்ததன் மூலம் வைரலானது.
படத்தையும் அத்தகைய போராளிகள் திட்டிக் கொண்டே காலை 5 மணி காட்சிக்கு அடித்து பிடித்துக் கொண்டு பார்த்து ஓவியாவின் படத்திற்கு இப்படி ஒரு ஓபனிங்கா என சொல்ல வைத்து விட்டனர்.
இந்த 4 பெண்களின் பழகக்த்திற்கு நடுவே, ஓவியாவின் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் பிரேக் அப் ஏற்படுகிறது. பின்னர், ஓவியாவிற்கு மறுபடியும் ஒரு காதலர் கிடைத்தாரா? இல்லையா? பெண் சுதந்திரம் என்றால், பெண்களும், ஆண்களை போல தம்மு, தண்ணி அடிப்பதால் தான் கிடைக்குமா? போன்ற பல கேள்விகளையும், அடுத்த 10 வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்களின் வரத்து மெஜாரிட்டியை தொடும் என்ற புரிதலுடன் படத்தை அணுக வேண்டியுள்ளது.
இந்த கதையில் சிம்புவுக்கு என்ன வேலை? இசையமைப்பதில், சொதப்பியுள்ள சிம்பு, திரையில் தோன்றும் காட்சியின் மூலம் ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து, இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு போன்ற வரிசையில் இன்னுமொரு அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள 90 எம் எல் தொடர்ந்து ஓடுமா இல்லை வீக்கெண்ட் கலெக்ஷன் மட்டும் தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சினி ரேட்டிங்: 2.5/5.



















