உலகம்
ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு: மீண்டும் வேகமாக பரவுகிறதா?

உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை மொத்தம் 11,52,76,591 பேர் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 9149 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,559,193 பேராக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 53,805 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,93,67,620 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் 1,821 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,29,049 பேராக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 58,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,47,845 பேராக அதிகரிப்பு என்றும், பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 1,726 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், இதனையடுத்து கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை அந்நாட்டில் 2,57,562 பேராக அதிகரிப்பு என்றும் தகவல் வெளிவந்துள்ளது.









