தமிழ்நாடு
அதிமுக, பாஜக இடையே எந்த மோதலும் இல்லை… கூட்டணி தொடரும்: ஜெயக்குமார் அந்தர் பல்டி!

அதிமுக-பாஜக இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. பாஜகவுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக, பாஜக இடையே எந்த மோதலும் இல்லை, கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

#image_title
அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார், அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது, அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் தேவை என்றெல்லாம் விமர்சித்திருந்தார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயக்குமார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவிற்கு நிகரானவர் உலகத்திலேயே கிடையாது. அண்ணாமலை அவரது மனைவியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதிமுக, பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை; கூட்டணி தொடரும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் அதிமுக 100 சதவீதம் உறுதியாக இருக்கிறது என்றார்.