தமிழ்நாடு
ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அதிரடி!

திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் செய்ய தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

#image_title
இந்நிலையில் இதற்கு இன்று பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சட்ட நடவடிக்கைக்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். என் மீதும் பாஜக மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதனை நான் PM Care நிதிக்கு வழங்க விரும்புகிறேன் என்றார்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொட்டுக்கப்படும் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என தெரிவித்துள்ளார்.