ஆன்மீகம்
கண் திருஷ்டி என்பது என்ன? யாருக்கு அதிகம் பாதிப்பு? தீர்க்கும் பரிகாரங்கள் என்ன?

இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில், கண் திருஷ்டி என்பது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு துன்பகரமான நிலை எனக் கருதப்படுகிறது. இது ஒருவர் மீது மற்றவர் ஏற்படுத்தும் பொறாமை, தீய எண்ணங்கள், அல்லது தீய பார்வையின் விளைவாக ஏற்படுகிறது.
கண் திருஷ்டி என்றால் என்ன?
கண் திருஷ்டி (Evil Eye) என்பது ஒருவர் மீது மற்றவரின் எதிர்மறை ஆற்றல் தாக்கம் ஏற்படுவது. இது வாழ்கையில் தடைகள், உடல் சோர்வு, மன அழுத்தம், பண நஷ்டம் போன்ற பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
திருஷ்டி இருப்பதற்கான அறிகுறிகள்:
அதீத உடல் சோர்வு
மனச்சோர்வு, கவலை
வேலைகளில் தடை
குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள்
பணப்பிரச்சனை
விபத்துக்கள், தொழிலில் நஷ்டம்
திருஷ்டி அதிகம் பாதிக்கும் ராசிகள்:
மீனம், கடகம், விருச்சிகம், கும்பம், தனுசு, ரிஷபம் போன்ற ராசிக்காரர்கள் கண் திருஷ்டிக்குப் பெரிதும் உள்ளாக வாய்ப்புள்ளது.
திருஷ்டி நீக்கும் பரிகாரங்கள்:
எலுமிச்சை, மிளகாய், கரி:
எலுமிச்சை, காய்ந்த மிளகாய், சிறிய கரி துண்டை ஒன்றாக கட்டி வீட்டின் வாசலில் தொங்க வைக்கலாம். இது தீய சக்தியை தடுக்க உதவுமாம்.
கல் உப்பு குளியல்:
வாரத்திற்கு ஒரு முறை கல் உப்பை நீரில் கலந்து குளிக்கலாம். இது உடலுக்கு இளைப்பாறல் அளித்து, திருஷ்டியை நீக்கும்.
கல் உப்பு துடைப்பு:
வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க கல் உப்பை தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் துடைக்கலாம்.
கொட்டாங்குச்சி, கற்பூரம்:
அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமை தினங்களில் 3 கண் கொண்ட கொட்டாங்குச்சியில் கற்பூரம் எரித்து திருஷ்டி கழிக்கலாம்.
திருஷ்டி கழிக்கும் நெறிமுறைகள்:
மூத்த நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
சாயங்கால நேரத்தில் மட்டும் செய்யவேண்டும்.
கிழக்கு திசை பார்த்து செய்யவேண்டும்.

















