Connect with us

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன் (2021, ஏப்ரல் 18 முதல் 24 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினத்தினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

***************************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து  வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வீண்பயம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும். 

**********************************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று கருடாழ்வாரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும்.

**********************************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு பேச்சுத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்கநிலை மாறும்.

*************************************************************************************

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம்.  சுபச்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள். 

***********************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன்  அது பற்றி பரிசீலிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும்.

***************************************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

இந்த வாரம் வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்தில் இருக்கும் மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும்.

***********************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.  ராதியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் மனோ தைரியத்தை தரும். பணவரத்து  திருப்திகரமாக இருக்கும்.  அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். தம்பதிகள்  இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதன் மூலம் எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

************************************************************************

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு  உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 

***************************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குருவின் இருப்பால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும்.  மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வணங்கி வர மனமகிழ்ச்சி அதிகரிக்கும். 

*******************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

இந்த வாரம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது.  கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி வர பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். 

***********************************************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் கூடும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: தினமும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும். 

***********************************************************************************************

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized2 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Snart kommer vi att expandera i online listor. Zmy, sid mellowdy & arkadi martinë – the same : a masterclass in collaborative chillhop. How to use storytelling in affiliate marketing.