Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 18 முதல் 24 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

முடிவுகளை தீர்க்கமாக எடுத்து காரிய வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மேலிடத்தில் இருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணவரவு வருவதற்கு வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உற்ற துணையாக இருப்பார்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

***********************************************************************************************

ரிஷபம்:

குறிக்கோளற்ற பயணங்களை சந்திக்கப் போகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கபெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தேவையான வசதிகள் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. திடீரென எதிர்பாராத செலவுகள் வரலாம்.

மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக நண்பர்களிடம் வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு

************************************************************************************************

மிதுனம்:

மிடுக்கான நடையுடன் பணிகளை நடத்தும் மிதுன ராசி அன்பர்களே,  இந்த வாரம் காரிய அனுகூலங்கள் ஏற்படும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக பணியாளர்கள் உதவி புரிவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். வீடு, மனை போன்றவற்றினால் லாபம் கிடைக்கும். சிக்கலான சமயங்களில் குல தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். பெரியோர்களின் ஆதரவு உண்டாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

*********************************************************************************************

கடகம்:

முன்னுக்குப் பின் முரணான முடிவுகளை ஒத்தி வைக்கும் கடக ராசி அன்பர்களே,  நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.

மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

************************************************************************************************

சிம்மம்:

தொழில் திறமை அதிகம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே,  நீங்கள் பிரச்சனையை கண்டு பயப்படமாட்டீர்கள். இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். சகோதர, சகோதரி வகையில் பிரச்சினைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூரதேசத்தில் இருந்து வரும் செய்திகள் சில கவலைகளை தரலாம்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்:  நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

************************************************************************************************

கன்னி:

கண்டிப்பான முறையில் முடிவுகளை எடுக்கும் கன்னி ராசி அன்பர்களே, உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்கள் மிகவும் அக்கறையுடன் உங்களை கவனிப்பர்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வரவாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது  அவசியம். எந்த சூழலையும் நீங்களே சமாளிப்பீர்கள்.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************************************************

துலாம்.:

எதிர்காலத்தை துல்லியமாக கணக்கிட்டு வாழும் துலா ராசி அன்பர்களே, உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும். வர வேண்டிய பாக்கிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். சகோதர சகோதரிகளிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் மேல் இருந்து வந்த வீண்பழி நீங்கும். உறவுகளுக்கிடையே சில்லறை சண்டைகள் சரியாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு

************************************************************************************************

விருச்சிகம்:

சிக்கலான நேரத்தில் வீணான காரியங்களை விட்டு விடும் விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். சிறு வியாபாரிகளுக்கு நல் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. உடனிருப்பவர்கள் யாரையும் யாருடைய வார்த்தைகளையும் நம்ப வேண்டாம்.

குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்:  மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

************************************************************************************************

தனுசு:

தன் பால் தவறு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்க தயாராகும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே  வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் நலனில் அதிக அக்கறை தேவை. ஏதாவது குறைபாடு தெரிய வருமேயானால் உடனே மருத்துவரை அணுகவும். தீடிரென உறவினர் வருகை இருக்கும். அவர்களின் வருகை நன்மையில் முடியும்.

பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி சம்மந்தமான கடன்களை தீர்த்து விடுவீர்கள்.

பரிகாரம்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************************************

மகரம்:

மரியாதையை அதிகம் எதிர்நோக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். பங்கு தாரர்கள் உங்கள் முடிவுக்கு ஆமோதிப்பார்கள். சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம்  கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள்  அலைய வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம். ஆனால் அதையும் சமாளிக்க உங்களால் முடியும். சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள்.

பெண்களுக்கு பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும்.

மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில்  திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, திங்கள்

************************************************************************************************

கும்பம்:

குடும்பத்துடன் சுற்றுலா செல்லவிருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும். தேவையான நிதி உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பொருள்களை கவனமாக  பாதுகாத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். திட்டமிட்டு எந்த வேலையையும் செய்வதன் மூலம் நன்மைகள் அதிக அளவில் நடக்கும்.

பெண்கள் எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது. சக மாணவர்களிடம் நட்போடு பழகுங்கள். நல்லது நடக்கும்.

பரிகாரம்: விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி

************************************************************************************************

மீனம்:

வாக்கு வன்மையால் அதிக நன்மையைப் பெறப் போகும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். பொருள்களை கவனமாக  பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த மனத் தாங்கல் மறைந்து போகும். குழப்பங்கள் மறைந்து போக குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுங்கள். எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். மனதைரியம் எந்த பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள்.

மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு  பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்:  ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள மணிமங்கலம் ஸ்ரீராஜகோபால பெருமாளை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Amet consectetur adipiscing. Link.