ஆரோக்கியம்
எச்சரிக்கை… இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் சில ஆபத்தான பானங்கள்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
எச்சரிக்கை… இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் சில ஆபத்தான பானங்கள்
இதய தமனிகள், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை போதுமான அளவில் செலுத்தும் ரத்த நாளங்களாக இருக்கின்றன. இவை சரியான முறையில் செயல்படாதபோது, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம். இதய தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும் போது, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதைத் தவிர்க்க, சில ஆபத்தான பானங்களை தவிர்க்க வேண்டும்.
சோடா பானங்கள்: அதிக சர்க்கரையுடன் தயாரிக்கப்படும் சோடா பானங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. இதில் உள்ள ஹை-பிராக்டோஸ் கார்ன் சிரப் (HFCS) கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும், இது இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.
காஃபின் பானம்: அதிக காஃபின் மற்றும் சர்க்கரை கொண்ட ஆற்றல் பானங்கள் இதயத் துடிப்பு மற்றும் பிபி அதிகரிப்பதை உண்டாக்குகின்றன. இதனால, இரத்த நாளங்களில் வீக்கமும், இதய அடைப்பு அபாயமும் ஏற்படும்.
செயற்கை பழச்சாறு: செயற்கை பழச்சாறுகளில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இதை தொடர்ந்து அருந்துவதால் கொழுப்பு சேரும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவையும், இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.
மில்க் ஷேக் மற்றும் ஸ்மூத்தி: பேக்கேஜ் செய்யப்பட்ட மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகளில் நிறமுடைய கலர்கள், சர்க்கரை மற்றும் கிரீம் ஆகியவை உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றது, இது கொழுப்பு சேர்க்க மற்றும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.
மதுபானம்: அதிகமாக மதுபானம் உட்கொள்ளும்போது, உடலில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும், இது இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில், கல்லீரலை சேதப்படுத்தி, கொழுப்பை கட்டுப்படுத்த முடியாமல் செய்யும்.
இந்த பானங்களை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளையும், சரியான வாழ்க்கை முறையையும் பின்பற்றுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














