சினிமா செய்திகள்
’மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய்சேதுபதியின் வில்லத்தனம்: டிரைலர் ரிலீஸ்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலக்கலாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய்யின் கேரக்டரை விட விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு திரைக்கதையில் அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தன என்பதும் அவரது நடிப்பு தான் மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை அடுத்து மேலும் ஒரு தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்ததே. ’உப்பன்னா’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது
விஜய் சேதுபதியின் அட்டகாசமான வில்லத்தனம் கொண்ட இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். புச்சிபாபு என்பவர் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது