சினிமா செய்திகள்
‘என்ன நண்பா ரெடியா? செம வீடியோ வெளியிட்ட ‘வாரிசு’ படக்குழு!
Published
2 months agoon
By
Shiva
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் டீசர் டிரைலர் ஆகியவை வெளியாகும் என்றும் டிசம்பர் 24-ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு ‘வாரிசு’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அந்த அப்டேட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் விஜய் திரையுலகிற்கு அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதை அடுத்து சூப்பர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#30YearsOfVijayism celebration starts nanba 🔥#VarisuUpdate at 6:30 PM#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman #Varisu #VarisuPongal pic.twitter.com/rfcmtYgCKj
— Sri Venkateswara Creations (@SVC_official) December 2, 2022
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்துள்ளனர்ர். வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
You may like
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!
இது 100 பர்சன்ட் தெலுங்கு படம்ப்பா! டோலிவுட்டில் சக்கைப் போடு போடும் வாரிசு; தில் ராஜு சம்பவம்!
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!