சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்த அருண் விஜய்!

விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நாயகர்களாக நடிக்கவுள்ள புதிய படம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
மூடர்கூடம் படத்தை இயக்கி நடித்திருந்த நவீன், தற்போது இயக்கி நடித்து வரும் அலாவுதினும் அற்புத கேமராவும் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அருண் விஜய்யும், இந்த செய்தியை நடிகர் விஜய் ஆண்டனியுடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு மீண்டும் ஒரு கம்பேக் கிடைத்துள்ளது.


















