பல்சுவை
காதலர் தின ஸ்பெஷல் பாடல்கள்! #ValentinesDaySpecialSongs

உலகை இயக்கும் சக்தி காதல். உள்ளத்தை நெகிழச் செய்யும் உக்கி காதல். வாழ்விற்கு அர்த்தம் தருவது காதல். வாழ்ந்து முடித்தாலும் வாழும் காதல். அப்படிப்பட்ட காதலையும், காதலர்களையும் கொண்டாடுவதற்காகவே ஒதுக்கப்படும் ஒரு நாள் ‘வேலன்டைன்ஸ் டே’ எனப்படும் ‘காதலர் தினம்’. எப்போதும் காதலர்கள் மத்தியில் அன்பு அளவில்லாமல் சுரந்து கொண்டே இருந்தாலும், அதை அதீதமாக வெளிப்படுத்தக் கிடைத்த வடிகாலே காதலர் தினம்.
பரிசுகள் வாங்கிக் கொடுத்து மகிழ்வதும், சர்ப்ரைஸ்கள் பல செய்து பூரிப்பதும் என காதலர் தினம் பற்றிய அனைத்தும் காதலர்களுக்கு ஸ்பெஷல் தான். அதுவும் அந்த தினம் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கொண்டாட்டங்களை ஆரம்பிக்க ‘கிஸ் டே’, ‘ஹக் டே’ எனப் புது புது ஐட்டங்களை ஆண்டுக்கு ஆண்டு நெட்டிசன்கள் இறக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் உங்கள் காதலர் தினத்தை மேலும் சிறப்பாக நாங்கள் தேர்வு செய்த 10 பாடல்களின் இசைத் தொகுப்பு: