இந்தியா
சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உபி அரசின் நிபந்தனை!

கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் போக்குவரத்துக்கள் நிறுத்தப்படலாம் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி கடந்த சில நாட்களாக சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை தாங்களே வீட்டிற்குள் 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கடந்த சில நாட்களாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறனர். அவ்வாறு திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் 7 முதல் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொழிலாளர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















