உலகம்
வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன்.. சிங்கிளாக புலம்பும் டிரம்ப்!

நியூயார்க்: நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது, அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் எல்லையை சுற்றி சுவர் எழுப்ப வேண்டி பணம் ஒதுக்க திட்டமிட்டு இருந்தார். மெக்சிகோ எல்லையில் சுவரை எழுப்புவதற்காக பணம் ஒதுக்க திட்டமிட்டு இருந்தார். இதனால் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு டிவிட் ஒன்று செய்துள்ளார். அதில் ”நான் தனியாக இருக்கிறேன் (பாவம்). வெள்ளை மாளிகையில் ஜனநாயக கட்சியினர் மீண்டும் வந்து பார்டர் ஒப்பந்தத்திற்கு கையெழுத்து இடுவார்கள் என்று தனியாக காத்து இருக்கிறேன்.
அவர்களுக்கு தெரியவில்லை, எல்லையில் சுவர் எழுப்புவதை விட இப்படி அவர்கள் அரசை முடக்குவதால்தான் அதிக செலவு இழப்பு ஏற்படுகிறது என்று” என அவர் தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.









