இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 18.12.2025

- இந்தியபொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு அறிவிப்பால் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு – தினமும் ரூ.60 கோடி இழப்பு.
- ஈரோடுபெருந்துறை விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் இன்றுகாலை 11 மணி முதல் 1 மணிவரை பரப்புரை
- உத்தரகாண்டில்ஒரு தனியார் நிறுவன ஊழியர் காதலி ஊருக்கு வருவதால் அவளுடன் நேரத்தைச் செலவழிக்க விடுமுறை வேண்டும் என்று அலுவலக மேலாளரிடம் விண்ணப்பித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் சென்னைஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளுர் மாவட்டம் மணலூரிலும் மின்னணு உற்பத்தித் தொகுப்பு திட்டங்கள் தொடங்க ஒன்றிய அரசு உத்தரவு.
- இன்றையதங்கம் விலை கிராம் ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.99520க்கு விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.224000 க்கு விற்பனை ஆகிறது.
- மேம்பட்டமரபணு பரிசோதனைகளை மலிவு விலையில் அறிமுகம் செய்து மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்.
- அணுசக்தித் துறையில் 100 சதவீதம்அன்னிய நேரடி முதலீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.
- சென்னையில்டிசம்பர் 21 முதல் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும். ஜனவரி 1 முதல் பயன்பாட்டுக்கு வரும். – போக்குவரத்துத் துறை அறிவிப்பு.







