செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள் (27-02-2023)

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. காங்கிரஸ், அதிமுக, சுயேட்ச்சை என மொத்தம் 77 நபர்கள் போட்டியிடுகிறார்கள். மார்ச் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
டெல்லி துணை முதல்வர் கைது!

CBI arrests Delhi Deputy CM Manish Sisodia
மதுபான கொள்கை முறைகேடு புகாரில், சிபிஐ விசாரணையை அடுத்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார்.
குஜராத்தில் நிலநடுக்கம்!
குஜராத் மாநில ராஜ்கோட் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. லேசான நில அதிர்வு என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஜோடோ யாத்திரை வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு – மேற்கு யாத்திரை!
இந்திய ஒற்றுமை நடைப்பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காஙிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த ஜோடோ யாத்திரை வெற்றி பெற்றதை அடுத்து, கிழக்கு மாநிலங்களை இருந்து வடக்கு மாநிலங்களை நோக்கி 2-ம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி செய்ய உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ரூ.2 லட்சம் நிதியுதவி!
காங்கேயம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.
காஷ்மீர் ‘லியோ’ படப்பிடிப்பு எப்போது நிறைவு?
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் அது மார்ச் 30-ம் தேதி நிறைவு பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்புக்கு ஏற்பட்டு வரும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இடையிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுப் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற 15 வயது சென்னை சிறுவன்!
84வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், சென்னையைச் சேர்ந்த 15வது சிறுவன் அபிநந்தன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.