வேலைவாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சென்ற ஆண்டு எழுதப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடைசியாக குரூப்-4 அரசி பணியாளர்களுக்கான தேர்வு 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதியவர்கள் நீண்ட காலமாக அதற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என காத்துக்கொண்டு இருந்தனர்.
இந்த தேர்வுக்கு 18.5 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துப் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் 2023 மார்ச் மாதம் இறுதியில் வெளியாகு என கூறப்பட்டுள்ளது.
ஆனால் சரியாக எந்த தேதியில் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
குரூப்-4, விஏஓ என மொத்தம் காலியாக உள்ள 7301 பணியிடங்கள் இந்த தேர்வு முடிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.