தமிழ்நாடு
ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் போட்டித்தேர்வுக்கு செல்ல அனுமதி உண்டா? தமிழக அரசு விளக்கம்

ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் போட்டி தேர்வுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரனோ மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஞாயிறன்று போட்டித் தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள் நடைபெற இருப்பதை அடுத்து அந்த தேர்வுக்கு செல்ல அனுமதி உண்டா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தினத்தில் போட்டி தேர்வுக்கு செல்பவர்களுக்கு, நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்களுக்கு அனுமதி உண்டு என தமிழக அரசு சட்டம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் போட்டித்தேர்வுக்கான அனுமதி சீட்டு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை காட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.









