வேலைவாய்ப்பு
திருநெல்வேலி சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு – 12வது மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 30, 2025!
திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக அடிப்படையில் இரண்டு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள்:
வழக்கு பணியாளர்
தரவு நுழைவு பணியாளர் (Data Entry Operator)
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
🧾 1. வழக்கு பணியாளர் (Case Worker)
காலியிடம்: 1
கல்வித் தகுதி:
சமூகப்பணி / உளவியல் / சமூகவியல் இளங்கலைப் பட்டம்
குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம்
சம்பளம்: ரூ.18,000
🧾 2. தரவு நுழைவு பணியாளர் (Data Entry Operator)
காலியிடம்: 1
கல்வித் தகுதி:
12ஆம் வகுப்பு தேர்ச்சி
கணினி சான்றிதழ் படிப்பு
தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
வயது வரம்பு: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
✅ தேர்வு முறை:
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
📮 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் முதலில் கீழ்கண்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும்:
👉 அறிவிப்பு பக்கத்திற்குச் செல்லபின்னர் பூர்த்தியான விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,
திருநெல்வேலி மாவட்டம்

















