உலகம்
இங்கிலாந்து முதல் அமெரிக்கா வரை: ஒரே ஒரு பயணிக்காக பறந்த விமானம்!

இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே பறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான பயணம் உள்பட அனைத்துவகை பயணங்களும் குறைந்துவிட்டது என்பதும் குறிப்பாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற ஒரு விமானத்தில் பிரபல டிக் டாக் பயனாளி ஃபோர்சித்என்பவர் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறினார். அவர் விமானத்தில் ஏறியதில் இருந்து கிளம்பும்போது வரை அவரை தவிர வேறு எந்த பயணியும் அந்த விமானத்தில் இல்லை என்பதை பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்தார்.
ஒரு முழு விமானத்தில் தான் மட்டுமே பயணம் செய்வதை அறிந்த ஃபோர்சித் மிகவும் உற்சாகமாகி வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்தார். விமானம் கிளம்பியது முதல் விமானம் முழுக்க காலியாக இருந்தது வரை விமானத்தின் இருக்கைகளை படுக்கையாக மாற்றியது வரை உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளன.
கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா வரை சென்ற விமானத்தின் பல காட்சிகளை அவர் டிக்டாக் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து ஃபோர்சித்பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘இதுவரை நான் மேற்கொண்ட விமானப் பயணங்களில் இதுதான் சிறந்தது. ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் எனக்கு வேண்டிய சிற்றுண்டி வகைகளை தாராளமாக விமான பணியாளர்கள் வழங்கினர். இதுவரை எங்குமே நடந்திராத அளவுக்கு பயணிகள் எண்ணிக்கையை விட விமான ஊழியர்கள் பணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். மேலும் விமானத்தில் தனியே இருந்ததால் விமான கேபின் குழுவினருடன் நட்பாகவும் மணிக்கணக்கில் சினிமா அரசியல் உள்ளிட்ட பேசிக்கொண்டே இருந்தோம். இது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.