வணிகம்
தமிழ்நாடு அரசு ரூ.40 ஆயிரம் தனிநபர் கடன் திட்டம்: யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிக்கும் விதிமுறை என்ன?

தமிழ்நாடு அரசு ரூ.40 ஆயிரம் தனிநபர் கடன் திட்டம் – யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு அரசு, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர்களுக்கு (மூன்றாம் பாலினத்தவர்) ரூ.40,000 வரை தனிநபர் கடன் வழங்குகிறது.
யார் பயன் பெறலாம்?
மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்)
முதியவர்கள்
நலிவடைந்த பழங்குடியினர் (PVTG)
திருநங்கையர்கள்
இவர்கள் சிறப்பு சுய உதவிக் குழுக்களின் (SHG) மூலம் சேர்க்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கடனின் விபரங்கள்
ஒருவருக்கு ரூ.40,000 வரை கடன்
சுமார் 6,000 நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம்
6% வட்டி விகிதத்தில் 12 முதல் 24 மாத தவணையில் செலுத்தும் வசதி
பிணையம் தேவையில்லை
உணவு பதப்படுத்தல், பண்ணை சாரா தொழில், சேவை மற்றும் வியாபாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தலாம்
சரியான காலத்தில் கடன் திருப்பிச் செலுத்தினால் மீண்டும் வங்கி கடன் பெற வாய்ப்பு
தகுதி நிபந்தனைகள்
18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
ஊரகப் பகுதியில் வசிக்க வேண்டும்
தனி நபர் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்
மாற்றுத் திறனாளிகள் – UDID அட்டை அல்லது பிற அடையாள அட்டை அவசியம்
திருநங்கையர்கள் – சமூக நலத்துறை வழங்கும் அடையாள அட்டை தேவை
விண்ணப்பிக்கும் முறை
ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்களை அணுகலாம்
தொடர்பு முகவரி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
அன்னை தெரசா மகளிர் வாகம்,
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை – 600 034அழைப்பு மைய எண்: 155 330














