சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் அட்டகாசமான டிரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அட்டகாசமான ஆக்ஷன் மற்றும் தங்கை சென்டிமென்ட் காட்சிகளும், நயன்தாராவுடன் ரொமான்ஸ் காட்சிகளும், மீனா மற்றும் குஷ்பு வரும் காட்சிகளும், பிரகாஷ்ராஜின் வில்லன் காட்சிகளும் இந்த டிரைலரில் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் கலர்ஃபுல்லான பாடல் காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் வெற்றிக்கு உதவும் வகையில் உள்ளதாக தெரிகிறது. இமானின் பாடல்கள், சிறுத்தை சிவாவின் குடும்ப சென்டிமென்ட் கலந்த வசனங்கள் ஆகியவை இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லரில் இருக்கும் சில வசனங்களை தற்போது பார்ப்போம்
’நீ யார் என்பது நீ சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் உன் மேல் வைத்திருக்கும் பயத்தில் இல்லை. நீ செய்த செயல்களிலும் நீ பேசுற பேச்சிலும் இருக்கிறது, இது வேத வாக்கு’
’கடவுள் கொடுக்கும் எல்லா செல்வத்தையும் என் தங்கச்சி கொடுக்க சொல்லுங்க’
’வாழ்க்கையில் எத்தனையோ எதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், முதல் முறையாக என்னை கண்ணீர் சிந்த வைத்த எதிரி நீ, உன்னை அழிப்பது என் கடமை அல்ல, உரிமை’
’நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அந்த சாமியே இறங்கி வந்து அவளுக்கு துணையாக நிற்கும்’
’கல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன், எஙக ஊரு மதுர வீரன் சாமிக்கு உன்னை நேர்ந்து விட்டுட்டேன்’