வணிகம்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்; வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது.
தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன் மீதான குறைந்தபட்ச வட்டி விகிதம் 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைத்து 6.25 சதவீதமான நிர்ணையித்துள்ள நிலையில் வங்கிகள் இன்னும் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
எனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகித குறைப்பை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் முதல் ஆளாக எஸ்பிஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் பிற வங்கிகளும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
















