டிவி
பிக்பாஸ் வீட்டில் வரும் வாரம் இரண்டு எவிக்ஷான்.. அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரையில் எப்போதும் இல்லாத அளவிற்கு, 21 போட்டியாளர்களுடன் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் வாரம் முடிந்த உடனே பிக்பாஸ் வீட்டில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜிபி முத்து, தனது மகன் மீது இருந்த அதீத பாசம் காரணமாகத் தாமாகவே முன் வந்து பிக்பாஸ் வீட்டை வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து குயின்ஸி உள்ளிட்டவர்கள் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டு, குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிலிருந்து குயின்ஸி வெளியேறிய பிறகு, அவருக்கான கடந்த வந்த பாதை வீடியோ காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களிடம் பேசிய கமல் ஹாசன் வரும் வாரம் இரண்டு நபர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் தனது வீட்டிலிருந்து பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியையும் கமல் கூறினார்.
இதை வைத்துப் பருக்கும் வரும் வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் கடுமையாகப் போட்டிப் போட்டு விளையாடுவார்கள் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் இதுவரையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா முதல் வார இறுதியில் வந்தார். வரும் வாரம் இரண்டு நபர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதால் வேறு யாராவது மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.