தமிழ்நாடு
ஸ்டாலினுக்கு மாநில அரசியலே தெரியாது… இதில் தேசிய அரசியல்…. கிண்டலடிக்கும் எடப்பாடி பழனிசாமி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே. நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசியலே ஒன்றும் தெரியாது. இதில் தேசிய அரசியல் எதற்கு என கிண்டலடித்துள்ளார்.

#image_title
முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பல்வேறு மாநில தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். இதனையடுத்து தேசிய அரசியலில் திமுகவின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசப்பட்ட நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்த அவர், முதல்வர் ஸ்டாலினின் தேசிய அரசியல் குறித்து பேசினார்.
அப்போது, ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு பல்வேறு மாநில தலைவர்களை பேச வைத்து தேசிய தலைவராக தன்னை முன்னிறுத்த பார்க்கிறார். அவருக்கு இங்குள்ள அரசியலே ஒன்றும் தெரியாது. இதில் தேசிய அரசியல் எதற்கு? மத்திய அரசில் அவரும், மாநில அரசியலில் அவரது மகனும் வரவேண்டும் என கனவு காண்கிறார். இதனை நாடு தாங்குமா? திமுகவின் இந்த குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பேசினார் எடப்பாடி பழனிசாமி.