Connect with us

உலகம்

வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது: பொதுமக்களுக்கு இலங்கை ராணுவ் தளபதி எச்சரிக்கை

Published

on

வீட்டை விட்டு தேவை யாரும் வெளியே வரக்கூடாது என இலங்கை நாட்டின் ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் மகிந்த ராஜபக்சவின் வீடு தீ வைக்கப்பட்டது என்பது ஆளும் கட்சி எம்பி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தநிலையில் இலங்கையில் போராட்டக்காரர்களின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் அதனை எப்படி அடக்குவது என்று தெரியாமல் இலங்கை அரசும் ராணுவமும் திணறி வருகிறது.

Flag of Sri Lanka on soldiers arm (collage).

இந்த நிலையில் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே பாதுகாப்பு காரணங்களுக்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவர் வேறு இடத்துக்கு மாற்றப் படுவார் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன என்பவர் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா என்பவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று இலங்கை வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், நாட்டையும் பொது சொத்துக்களை சேதம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?