உலகம்
கொரோனா பரவல் எதிரொலி: வகுப்பறையாக மாறிய கடற்கரை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்துமே முடங்கி உள்ளது என்பதும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இதே ரீதியில் சென்றால் மாணவர்களின் படிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் ஸ்பெயின் நாட்டில் ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அறைக்குள் முடங்கி கிடந்து பாடங்கள் நடத்தினால்தான் கொரோனா வைரஸ் ஒருவருக்கொருவர் பரவும் என்றும் இதே வெட்டவெளியில் தூய்மையான காற்று உள்ள இடத்தில் வகுப்பறையை மாற்றினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஸ்பெயின் நாட்டின் ஒரு சில பள்ளிகள் கடற்கரையில் மாற்றப்பட்டுள்ளது. தூய்மையான காற்றுடன் அலைகள் வீசும் பின்னணியில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து கடற்கரையை பள்ளி வகுப்புகளாக அந்நாட்டின் கல்வி அதிகாரிகள் மாற்றியுள்ளனர். இதே முறையை உலகின் பல நாடுகள் கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.