சினிமா செய்திகள்
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் மிரட்டலான டீசர்.. வரான் வரான் இந்த வீரத் தமிழன்!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தின் டீசர் இன்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகியுள்ளது. இதற்காகச் சிம்பு ரசிகர்கள் அலாரம் வைத்தும், தூங்காமல் விழித்து இருந்தும் டீசரை ட்ரென்டாக்கி வருகின்றனர்.
டீசரில் வரும் வரான் வரான் இந்த வீரத் தமிழன், வரலாற்றைத் திருப்பி எழுதி எழுதும் தலைவன் என்ற பாடல் மாசாகவும், டீசர் ஆரம்பிக்கும் வரும் பீஜியம் மன்மதன் படம் போலவும் உள்ளது. கடவுளைச் சிரிக்க வைக்க என்ன பண்ணனும் தெரியுமா? நம்ம பிளான அவர் கிட்ட சொன்னாலே போதும் விழுந்து விழுந்து சிரிப்பார், அடுத்து என்ன நடக்க போகுதுனு தெரிஞ்சவன் சைலண்ட்டா ஆ தான் இருப்பான் என்ற வசனங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டுகின்றனர். போஸ்டர் டீசர் என இரண்டிலும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என தெரியவில்லை. ஆனால் ஆங்காங்கே நாயகி வரும் காட்சிகள் அழகாக உள்ளன. கதை என்ன என்று யூகிக்க முடியாத அளவிற்கு டீசர் வந்துள்ளது.
ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங். தமன் இசை அமைத்துள்ளார்.