சினிமா செய்திகள்
அதிதி ஷங்கரின் ‘விருமன்’: பூஜையில் கலந்து கொண்டது யார் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் ’விருமன்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் படத்தின் பூஜையில் ஷங்கர் கலந்து கொண்டு தனது மகளை ஆசீர்வதித்தார். மேலும் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் முத்தையா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, 2டி நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்டு ஷங்கரின் மகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் முத்தையாவின் வழக்கமான கிராமத்து கதையம்சம் கொண்ட இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் காதல், குடும்ப சென்டிமென்ட் உள்பட அனைத்தும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும் இந்த படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முடிக்க இயக்குனர் முத்தையா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தின் கதையின்படி நாயகிக்கு வலுவான கேரக்டர் என்றும் ஷங்கரின் மகள் தனது அப்பாவின் பெயரை இந்தப் படத்தில் காப்பாற்றும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















