Connect with us

தமிழ்நாடு

30 அடிக்கும் மேல் எழுந்த கடல் அலைகள்: தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்

Published

on

தனுஷ்கோடியில் கடல் அலை 30 அடிக்கு மேலாக இருந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வத்துடன் அதனை பார்த்து வந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நகரம்தான் தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தனுஷ்கோடி இலங்கையுடன் கடல் வாணிபம் செய்து வந்த சிறந்த துறைமுகமாக விளங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ஏற்பட்ட புயல் காரணமாக ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த ரயில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணம் செய்த 123 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ்கோடி முற்றிலும் சிதிலமடைந்து 50 ஆண்டுக்கு மேலாகியும் தற்போது தான் ஓரளவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடியில் திடீரென முப்பது அடிக்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் இதனால் போலீசார் கடலலைகள் அருகே பொதுமக்கள் செல்லாது இருக்கும் வண்ணம் தடுப்புகளை அமைத்ததாகவும் கூறப்படுகிறது .

இந்தநிலையில் தடுப்புகள் அருகே நின்று சுற்றுலா பயணிகள் 30 அடிக்கு மேல் சீறி வரும் கடல் அலையை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?