வேலைவாய்ப்பு
SBI வங்கியில் 541 அசிஸ்டன்ட் மேனேஜர் (PO) பணியிடங்கள்! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – முழு விவரம் இங்கே

வங்கி வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு! இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 541 Assistant Manager (Probationary Officer) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் 30.09.2025க்குள் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.04.2025 ,21 முதல் 30 வயது வரை. SC/STக்கு 5 ஆண்டு தளர்வு, OBCக்கு 3 ஆண்டு தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்:
அடிப்படை சம்பளம் ரூ.48,480; வருடம் சுமார் ₹20.43 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்பு!
தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு: 100 மதிப்பெண்கள், 1 மணி நேரம், 3 பிரிவுகள்: ஆங்கிலம், திறனறிதல், கணிதம்.
முதன்மைத் தேர்வு: Objective Type – 200 மதிப்பெண்கள் (3 மணி நேரம்), Descriptive Type – 50 மதிப்பெண்கள் (30 நிமிடங்கள்).
நேர்முகத் தேர்வு: செப்டம்பர் 2025 முதல் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது/OBC/EWS: ₹750
SC/ST/மாற்றுத்திறனாளி: கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
14 ஜூலை 2025
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளங்கள்:
முக்கிய டேட்டுகள்:
Prelims Exam: ஜூலை / ஆகஸ்ட் 2025
Mains Exam: செப்டம்பர் 2025
Interview: அக்டோபர் / நவம்பர் 2025