பர்சனல் பைனான்ஸ்
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.. வாட்ஸ்-அப் மூலம் இந்த 9 சேவைகளை பெறலாம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியில் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் வங்கிக்கு சென்று ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. வங்கியில் பணம் எடுக்க வேண்டும் என்றாலோ, இன்னொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றாலோ வங்கிக்கு நேரடியாக சென்றால்தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் நிலையில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில நொடிகளில் பல செயலிகள் இதற்கு உதவியாக உள்ளன என்பதும் இதன் மூலம் வீட்டில் உட்கார்ந்த இடத்திலிருந்து பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பீம் செயலி தற்போது ஏராளமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள என்ஆர்ஐ மக்களுக்கும் தற்போது பீம் ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் பல்வேறு நாடுகளில் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிகமாக ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் மூலமும் வங்கி பரிவர்த்தனை செய்யும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாட்ஸப் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு தற்போது மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் இந்த வசதிகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் பேங்கில் கிடைக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
1. கணக்கு இருப்பு: மினி அறிக்கை (கடைசி 5 பரிவர்த்தனைகள்)
2. ஓய்வூதிய தகவல்கள், வைப்பு நிதி பற்றிய தகவல், சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு, கால வைப்பு ஆகியவற்றின் தகவல்கள் மற்றும் வட்டி விகிதங்கள்.
3. கடன் விவரங்கள்: வீட்டுக் கடன், கார் கடன், தங்கக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் ஆகியவற்றின் முழு தகவல்கள் மற்றும் வட்டி விகிதங்கள்.
4. NRI சேவைகள்: NRE கணக்கு, NRO கணக்கு மற்றும் அதற்கான வட்டி விகிதங்கள்.
5. உடனடி அக்கவுண்ட் ஓப்பன் செய்வது: புதிய வங்கி அக்கவுண்ட் ஓப்பன் செய்வதற்கான அம்சங்கள் / தகுதி, தேவைகள் & மற்றும் இது தொடர்பான கேள்விகளுக்கானபதில்கள்.
6. வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொடர்பு எண்கள் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான உதவி எண்கள்.
7. அங்கீகரிக்கப்பட்ட கடன் தகவல்கள்: தனிநபர் கடன், கார் கடன், இரு சக்கர வாகனக் கடன்.
8. அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட், டி-ரிஜிஸ்டர் வாட்ஸ்அப் பேங்கிங் ஆகிய வசதிகள்
9. ஒரே க்ளிக்கில் கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் மற்றும் மினி அறிக்கை பெறலாம்.
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையை பயன்படுத்த வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து WAREG A/C எண்ணை 917208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். பதிவு முடிந்ததும், நீங்கள் SBI இன் WhatsApp சேவையைப் பயன்படுத்த முடியும். மேல்ம் ஒரு பாப்-அப் செய்தி வாட்ஸ்அப்பில் ஹாய் என 909022690226 என்ற எண்ணுக்கு அனுப்பி, அதன் பிறகு Chatbot இன் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
எஸ்பிஐ, வாட்ஸ் அப், வாடிக்கையாளர்கள்,