Connect with us

உலகம்

எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிது.. சவுதி அரேபியாவில் உருவாகும் பிரமாண்ட கட்டிடம்..!

Published

on

நியூயார்க்கில் உள்ள எம்பயர் எஸ்டேட் என்ற கட்டிடம் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் அதை விட 20 மடங்கு பெரிய கட்டிடம் ஒன்று சவுதி அரேபியாவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி விஷன் 2030 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத் நகரில் உலகின் மிகப்பெரிய நவீன கட்டிடம் ஒன்று கட்ட இருப்பதாகவும் இது ஒரு நகரத்திற்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரியாத் நகரின் வடமேற்கில் அமைய இருக்கும் இந்த கட்டிடம் 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.

1,04,000க்க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 9000 ஹோட்டல் அறைகள் மற்றும் பல முக்கிய அம்சங்கள் இந்த கட்டிடத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. முரப்பா டெவலப்மென்ட் நிறுவனம் இந்த திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த கட்டிடத்திற்கு ’முகாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரபு மொழியில் ’முகாப்’ என்றால் கன சதுரம் என்ற பொருள் என தெரிகிறது. பெயருக்கு ஏற்றவாறு இந்த கட்டிடம் 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம் மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்டதாக சதுர வடிவமாக இருக்கும் என்றும் உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக இந்த கட்டிடம் இருக்கும் என்றும் டெவலப்பர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான கன சதுரத்தின் உள்ளே பாரம்பரிய கட்டிடக்கலை பாணி இருக்கும் என்றும் டிஜிட்டல் மற்றும் மெய் நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஹாலோகிராபிக்ஸ் மூலம் இந்த கட்டிடத்தின் டிசைன் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

பசுமையான பகுதிகள், நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதைகள், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்து வசதிகள், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அம்சங்களும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடத்தின் உள்ளே அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களைக் கொண்டது என்றும் திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு கலாச்சார அரங்குகளும் இருக்கும் என்றும் சவுதி அரேபியாவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு முக்கிய பங்காக இந்த கட்டிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 500 பில்லியன் டாலர் என்றும் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மெகா நகரம் போல் உருவாகும் இந்த கட்டிடத்தில் உள்ள தெருக்கள், சாலைகளில் பூஜ்ஜியம் கார்பன் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?