உலகம்
உக்ரைன் மீது போர்: ரஷ்ய அதிபர் அதிரடி உத்தரவு!

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்தது என்பதும் இதனை அடுத்து உலக நாடுகள் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது என்பதும் ஐநாவும் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஷ்யா மீது ஜப்பான் அமெரிக்கா உள்பட ஒரு சில மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில நிமிடங்களில் போது ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகள் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துமா? இது உலக போராக மாறுமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் வேண்டும்.





















