சினிமா செய்திகள்
ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ‘நட்பு’ பாடல் ரிலீஸ்: அனிருத்தின் அசத்தலான குரல்!
Published
1 year agoon
By
Shiva
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
மேலும் இந்த படத்தில் தமிழ் பாடலை அனிருத் பாடியுள்ளார் என்ற தகவல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் படத்தில் அனிருத் பாடிய பாடல் வெளியாகி உள்ளது
மரகதமணி இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் அனிருத் பாடிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த ஐந்து மொழிகளில் பாடிய பாடகர்கள் இந்த பாடலில் தோன்றி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி ஒருசில காட்சிகளில் இசையமைப்பாளர் மரகதமணி தோன்றுகிறார் என்பதும் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் பாலையா ஆகிய இருவரும் இந்த பாடலில் தோன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் பிரபலங்களான அஜய்தேவ்கான், ஆலியாபட் மற்றும் ஹாலிவுட் பிரபலம் ஒலிவியா மோரிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
You may like
-
’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு கோல்டன் குளோப் விருது? உலக அளவில் கெத்து காட்டும் இந்திய திரைப்படம்!
-
ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது.. உறுதி செய்த ராஜமவுளி!
-
அனிருத்-கீர்த்தி சுரேஷ் திருமணமா? இது என்னடா புதுக்கதையா இருக்கு?
-
அஜித், விஜய்யை இணைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு படம்: எஸ்.எஸ்.ராஜமவுலி திட்டம்?
-
புதையலை தேடும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
-
நெல்சன் தான் இயக்குனர்: அனிருத்திடம் உறுதி சொன்ன ரஜினிகாந்த்