சினிமா செய்திகள்
அஜித்தின் ‘வலிமை’ சிங்கிள் பாடல் இன்று ரிலீஸா?

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரஷ்யாவில் ஒரு அதிரடி சண்டைக் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது என்றும், இந்தப் படப்பிடிப்புக்காக வரும் செப்டம்பர் மாதம் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வரவேற்பை பெற்றது என்பதும் அதனை அடுத்து ஃபர்ஸ்ட்லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அடுத்ததாக இன்று இரவு ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் இணையதளங்களில் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாகி இதுகுறித்து ஹேஷ்டேக்குகளை பதிவு செய்து டிரெண்டாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்துடன் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளதால் இந்த பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் ஜோடியாக ஹூமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் குக்வித் கோமாளி புகழ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




