தமிழ்நாடு
இன்று முதல் 4 நாட்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை எச்சரிக்கை

வங்கக்கடலில் தோன்றி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில் மேலும் கனமழை அறிவிப்பு மற்றும்ர் எட் அலர்ட் எச்சரிக்கை ஆகியவை பொதுமக்களை பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






