சினிமா செய்திகள்
சர்ச்சையுடன் தொடங்கிய ராம் கோபால் வர்மாவின் சசிகலா பயோபிக்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் என்ற பெயரில் பல படங்கள் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில், சர்ச்சை இயக்குநர் என பெயர் வாங்கிய ராம் கோபால் வர்மா, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்க உள்ளார்.
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான லக்ஷ்மியின் என்.டி.ஆர் படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பானமானது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் வாழ்க்கையை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அரசியல், மன்னார்குடி மாஃபியா, நட்பு, பகைமை என பல சர்ச்சையான விஷயங்களுடன் சசிகலா பயோபிக் உருவாகவுள்ளதாக ராம் கோபால் அறிவித்துள்ளார்.
லக்ஷ்மியின் என்.டி.ஆர் படத்துக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டது போல, தமிழ்நாட்டில் சசிகலாவின் பயோபில் வெளியாவதும் சந்தேகமே..




















