சினிமா செய்திகள்
வெற்றி மமதையில் அல்லு அர்ஜுன்.. அபராதம் விதித்த காவல் துறையினர்!

புஷ்பா படம் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்துக்காக அல்லு அர்ஜுன் அபராதம் செலுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அல்லு அர்ஜுனிடம் ஆடம்பர காரான ரேஞ் ரோவர் எஸ்யுவி ஆடம்பர கார் ஒன்று உள்ளது. இந்த காரின் ஜன்னல் கண்ணாடிகளில் வெளியிலிருந்து பார்க்க முடியாத படி திரையை ஒட்டியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளின் படி கார் கண்ணாடிகளில் இதுபோன்ற திரையை ஒட்டக்கூடாது. அந்த காரணத்திற்காக அல்லு அர்ஜுனின் ரேஞ் ரோவர் எஸ்யுவி ஆடம்பர காரை நிறுத்திய ஹைதராபாத் போக்குவரத்துக் காவல் துறையினர் 700 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக இதே காரணத்துக்காகத் தெலுங்கு நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், மனோஜ் மஞ்சு, திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டவர்களின் கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



















